செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்


செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:34 PM GMT (Updated: 24 Jan 2022 7:34 PM GMT)

வத்திராயிருப்பில் செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மண் அள்ள அனுமதி 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டு செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள கண்மாய்களில் அனுமதி வழங்க வேண்டும். சொந்த நிலத்தில் மண் அள்ளி செங்கல் உற்பத்தி செய்ய விண்ணப்பம் பெறும் நிபந்தனைகளை தளர்த்தி உடனே அனுமதி வழங்க வேண்டும்.
 புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பொதுமக்களின் வாழ்வாதார வளர்ச்சி பறிபோவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் கையில் செங்கலுடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் 
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். விருதுநகர் மாவட்ட செங்கல் உற்பத்தி மாவட்ட அமைப்பாளர் குருசாமி முன்னிலை வகித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகள், மாட்டுவண்டி தொழிலாளர்கள், செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பலர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story