‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:36 PM GMT (Updated: 24 Jan 2022 7:36 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

 மதுரை மாவட்டம் வேடர் புளியங்குளம் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
செல்வி, வேடர்புளியங்குளம். 

ஆக்கிரமிப்பு

 சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஹவுசிங் போர்டு காலனி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிலர் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. ஒரே நேரத்தில் அதிகபடியான வாகனங்கள் பயணிப்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நடக்கிறது. எனவே சீரான போக்குவரத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கோகுல், காரைக்குடி.

பஸ் வசதி 

 விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆர்.ஆர்.நகர், புதுப்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும். கூடுதல் பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பகுதிக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
சுந்தரமூர்த்தி, விருதுநகர். 

குப்பை தொட்டி 

மதுரை மாவட்டம் இலங்கிப்பட்டி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி சாலையின் ஒரத்தில் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது. குப்பைகள் அதிகமாக கொட்டப்படாத நிலையில் குப்பை தொட்டி காலியாகவே உள்ளது. இந்த குப்பை தொட்டியை பயனுள்ள இடத்தில் மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
தெய்வம், மதுரை.

போக்குவரத்திற்கு இடையூறு 

 மதுரை மீனாட்சி நகர், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.              
காவியா, மதுரை.

Next Story