குடியரசு தினத்தையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை


குடியரசு தினத்தையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை
x
தினத்தந்தி 24 Jan 2022 9:33 PM GMT (Updated: 2022-01-25T03:03:07+05:30)

குடியரசு தினத்தையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர்.

ஈரோடு
குடியரசு தினத்தையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். 
குடியரசு தின விழா
இந்திய குடியரசு தின விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர், அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை
ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து நேற்று சோதனை செய்தனர். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தனர். மேலும் ஈரோடு மாவட்ட மோப்பநாய் பிரிவினரும் ஈரோடு ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 
இதுபோல் ரெயில் தண்டவாளம், காவிரி பாலம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story