உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி 15 ஆடுகள் செத்தன


உளுந்தூர்பேட்டை அருகே  லாரி மோதி 15 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 25 Jan 2022 3:48 PM GMT (Updated: 25 Jan 2022 3:48 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி 15 ஆடுகள் செத்தன

உளுந்தூர்பேட்டை

நாகை மாவட்டம் இடையத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அலங்கிரி-செம்பியன்மாதேவி பகுதியில் பட்டி அமைத்து தனக்கு சொந்தமான ஆடுகளை வளர்த்து வருகிறார்.

முத்துக்குமார் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஆடுகள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தன. இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story