சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2022 7:48 PM GMT (Updated: 25 Jan 2022 7:48 PM GMT)

ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே ஆலங்காடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தற்காலிக தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம்பாள் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார். வட்டார தணிக்கை அலுவலர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் தணிக்கை பணியில் ஈடுபட்டு சமூக தணிக்கை அவசியம் குறித்து விளக்கி பேசினர்.கூட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடந்த பல்வேறு பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை, பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் எண்ணிக்கை, வேலை நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அனைத்து விவரங்களும பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நேருஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தற்காலிக எழுத்தர் உதயகுமார் நன்றி கூறினார்.

Next Story