மைசூருவில், பட்டப்பகலில் வகுப்பறையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்


மைசூருவில், பட்டப்பகலில் வகுப்பறையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்
x
தினத்தந்தி 25 Jan 2022 7:58 PM GMT (Updated: 25 Jan 2022 7:58 PM GMT)

மைசூருவில் பட்டப்பகலில் வகுப்பறையிலேயே மாணவியிடம், தலைமை ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு:

தலைமை ஆசிரியர்

  மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.

  இந்த நிலையில் அவர் தனது பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவியை தனது ஆசைக்கு இணங்கும்படி ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். அவரது பேச்சில் மயங்கிய மாணவியும் தலைமை ஆசிரியரின் ஆசைக்கு இணங்கி உள்ளார். இதையடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி தலைமை ஆசிரியர் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார்.

கல்வித்துறை அதிகாரிகள்...

  இந்த நிலையில் அந்த மாணவியை தலைமை ஆசிரியர், பள்ளி வகுப்பறையில் ஆளில்லாத நேரத்தில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதை சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

  மேலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த கல்வித்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை வட்டார கல்வித்துறை அதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story