நாங்குநேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி


நாங்குநேரி அருகே  மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி
x
தினத்தந்தி 25 Jan 2022 9:10 PM GMT (Updated: 2022-01-26T02:40:10+05:30)

மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்

நாங்குநேரி:
நாங்குநேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-1 மாணவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் சிவனணைந்த பெருமாள் (வயது 55). கூலித்தொழிலாளி இவருடைய மகள் ஸ்வேதா (17). பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
சாவு
பின்னர் நேற்று மாலை ஸ்வேதாவின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்வேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி அழுதனர். 
 இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாணவி இறப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story