பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Jan 2022 9:15 PM GMT (Updated: 25 Jan 2022 9:15 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.
கீழ்பவானி வாய்க்கால்
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில், ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல் பயிரிட்டனர். கடந்த ஜனவரி 15-ந் தேதியுடன் தண்ணீர் திறப்பு கெடு முடிவடைந்தது. 
தண்ணீர் திறப்பு
ஆனாலும் பாசன பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் நெற்கதிர்கள் முற்றாததால் விவசாயிகள் தண்ணீர் திறப்பை நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6 மணிமுதல் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.81 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,521 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 

Next Story