திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனர்கள், சின்னங்களை அகற்ற கலெக்டர் உத்தரவு


திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனர்கள், சின்னங்களை அகற்ற கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Jan 2022 6:47 PM GMT (Updated: 2022-01-27T00:17:22+05:30)

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனர்கள், சின்னங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், நாடட்றம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக வந்தது.

எனவே மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 5 கிலோமீட்டர் பரப்பளவிற்கு அரசியல் கட்சி சார்ந்த விளம்பர பேனர்கள், கட்சி சின்னங்களை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Next Story