இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 7:07 PM GMT (Updated: 26 Jan 2022 7:07 PM GMT)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.27
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கான தேர்வில் தமிழக ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த ஊர்தியுடனும், சுதந்திர போராட்ட வீரர்களின் முகமூடி அணிந்து கொண்டும் மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்தியுடன் ஊர்வலம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல்  மணப்பாறை பஸ் நிலையம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழமை கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதே போல் மார்க்சிஸ்ட் லெலினிஸ்டு கட்சி சார்பில் இந்திய குடியரசு காப்போம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை மதசார்பின்மையை காப்பாற்றுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story