ஒரே நாளில் 1,457 பேருக்கு தொற்று


ஒரே நாளில் 1,457 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 26 Jan 2022 8:07 PM GMT (Updated: 2022-01-27T01:37:47+05:30)

சேலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,457 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,087 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 1,457 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மட்டும் 663 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஓமலூரில் 78 பேர், பனமரத்துப்பட்டியில் 52 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 57 பேர், தாரமங்கலத்தில் 67 பேர், வீரபாண்டியில் 64 பேர், எடப்பாடியில் 24 பேர், சங்ககிரியில் 51 பேர், கொளத்தூரில் 27 பேர், ஆத்தூரில் 17 பேர், தலைவாசலில் 49 பேர் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 33 பேர், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 5 பேர் என மொத்தம் 1,457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தை சேர்ந்த 75 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் கிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,738 ஆக அதிகரித்துள்ளது.
கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Next Story