மாவட்ட செய்திகள்

திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல் + "||" + H Raja offers his condolences to the family of the youth who caught fire in Thiruthani

திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல்

திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல்
திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல் கூறி சென்றார்.
திருத்தணியில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவதூறு தகவலை பரப்பியதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம் சரவண பொய்கை குளம் அருகே வசித்து வந்த நந்தன் (வயது 65) என்பவர் மீது திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனால் மனமுடைந்த நந்தனின் மூத்த மகன் குப்புசாமி (35), தனது தந்தை மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி கடந்த 11-ந் தேதி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கி சென்றார்.

இந்த நிலையில் நேற்று பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அங்கிருந்து தற்கொலை செய்துகொண்ட குப்புசாமி வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி சென்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி அருகே 6 ஆண்டுகளாகியும் கட்டி முடிக்கப்படாத தொகுப்பு வீடுகள்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருத்தணி அருகே 6 ஆண்டுகளாகியும், தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. திருத்தணி அருகே கல்லூரி மாணவருக்கு அடி-உதை
திருத்தணி அருகே கல்லூரி மாணவரை அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கி அடித்து உதைத்தனர்.
3. திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதலில் டாக்டர் பலி
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டாக்டர் பலியானார்.
4. திருவள்ளூர், திருத்தணியில் பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம்
திருவள்ளூர், திருத்தணியில் பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் பேரில், பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
5. திருத்தணியில் பங்குனி உத்திர திருவிழா - வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை
திருத்தணியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பக்தர்கள் மணிக்கணக்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.