நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 பேர் வாக்களிக்க உள்ளனர்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 பேர் வாக்களிக்க உள்ளனர்
x

திருவாரூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 பேர் வாக்களிக்க உள்ளனர்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 பேர் வாக்களிக்க உள்ளனர். 

நகராட்சி தேர்தல்

திருவாரூர் மாவட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடக்கிறது. 
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள், மன்னார்குடி நகராட்சியில் 33 வார்டுகள், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள், கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகள் என மொத்தம் 111 வார்டுகள் உள்ளன.
இதில் திருவாரூர் நகராட்சியில் 23 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்கள், 26 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர்.

மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி

மன்னார்குடி நகராட்சியில் 30 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்கள், 32 ஆயிரத்து 870 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 62 ஆயிரத்து 988 வாக்காளர்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 8 ஆயிரத்து 382 ஆண் வாக்காளர்கள், 9 ஆயிரத்து 134 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர். 
கூத்தாநல்லூர் நகராட்சியில் 11 ஆயிரத்து 110 ஆண் வாக்காளர்கள், 12 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 3 பேர் என மொத்தம் 23 ஆயிரத்து 388 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளையும் சேர்த்து 73 ஆயிரத்து 446 ஆண் வாக்காளர்கள், 80 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 137 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

7 பேரூராட்சிகள்

திருவாரூர் மாவட்டத்தில் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை என 7 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பேரளம் பேரூராட்சி-12 வார்டுகள், நன்னிலம் பேரூராட்சி-15 வார்டுகள், குடவாசல் பேரூராட்சி-15 வார்டுகள், கொரடாச்சேரி பேரூராட்சி-15 வார்டுகள், வலங்கைமான் பேரூராட்சி-15 வார்டுகள், நீடாமங்கலம் பேரூராட்சி-15 வார்டுகள், முத்துப்பேட்டை பேரூராட்சி-18 வார்டுகள் என மொத்தம் 105 வார்டுகள் உள்ளன.
இதில் பேரளம் பேரூராட்சியில் 2 ஆயிரத்து 482 ஆண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 566 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர்.

நன்னிலம்-குடவாசல்

நன்னிலம் பேரூராட்சியில் 4 ஆயிரத்து 678 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 919 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 597 வாக்காளர்கள் உள்ளனர். குடவாசல் பேரூராட்சியில் 5 ஆயிரத்து 748 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 104 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர்.
கொரடாச்சேரி பேரூராட்சியில் 2 ஆயிரத்து 769 ஆண் வாக்காளர்கள், 3 ஆயிரத்து 64 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 5 ஆயிரத்து 835 வாக்காளர்கள் உள்ளனர். வலங்கைமான் பேரூராட்சியில் 4 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 884 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர். 

நீடாமங்கலம்-முத்துப்பேட்டை

நீடாங்கலம் பேரூராட்சியில் 3 ஆயிரத்து 697 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 151 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 7 ஆயிரத்து 849 வாக்காளர்கள் உள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9 ஆயிரத்து 7 ஆண் வாக்காளர்கள், 9 ஆயிரத்து 655 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 662 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 32 ஆயிரத்து 988 ஆண் வாக்காளர்கள், 35 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 3 பேர் என 68 ஆயிரத்து 334 வாக்காளர்கள் உள்ளனர்.
4 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் மொத்தம் 216 வார்டுகள் உள்ளன. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 27 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல்களுக்காக 282 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story