மளிகை கடையில் திருடிய முதியவர் கைது


மளிகை கடையில் திருடிய முதியவர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 2:52 PM GMT (Updated: 2022-01-27T20:22:55+05:30)

விளாத்திகுளத்தில் மளிகை கடையில் திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்

எட்டயபுரம்:
எட்டயபுரம் சாலையிலுள்ள ஒரு ஓட்டல் முன்பு நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த முதியவரை விளாத்திகுளம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பிள்ளையார் கோவில் தெரு அருணாசலம் மகன் ராஜேந்திரன் (வயது 71) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், இவர் கடந்த 16-ந் தேதி விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள ஸ்டாலின் என்பவரது மளிகை கடையை உடைத்து ரூ.80ஆயிரத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் விளாத்திகுளம் - எட்டயபுரம் மெயின் ரோட்டில் சித்தவநாயக்கன்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அனந்தராமன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிவந்தது.
இதை தொடர்ந்து விளாத்திகுளம் போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். கைதான ராஜேந்தின் மீது விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 44 வழக்குகள் உள்ளன. அதில் 29 திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story