டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி


டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 4:57 PM GMT (Updated: 2022-01-27T22:27:37+05:30)

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். 

7-ம் வகுப்பு மாணவன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்பாபு. விவசாயி. இவருடைய மகன் சசிகுமார் (வயது12). 7-ம் வகுப்பு படித்து வந்த சசிகுமார் நேற்று பாமணியில் தனது பாட்டி வீட்டிற்கு வந்தான். 
அப்போது வீட்டின் அருகே நின்ற டிராக்டரை சசிகுமார் ஓட்ட முயற்சி செய்தான். இதில் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் வாய்க்காலின் சேற்றில் சிக்கிக்கொண்ட சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று வாய்க்காலின் சேற்றில் சிக்கி இருந்த சசிகுமாரின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணை

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story