கொடுமுடி அருகே சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டுக்கு கலெக்டர் சென்று மரியாதை


கொடுமுடி அருகே சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டுக்கு கலெக்டர் சென்று மரியாதை
x
தினத்தந்தி 27 Jan 2022 8:50 PM GMT (Updated: 2022-01-28T02:20:56+05:30)

கொடுமுடி அருகே சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டுக்கு கலெக்டர் சென்று மரியாதை செலுத்தினாா்.

கொடுமுடி
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையத்தில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகி கே.கே. முத்துசாமியின் வீட்டுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று சால்வை அணிவித்தும், பரிசு பொருட்கள் வழங்கியும் மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Next Story