வெள்ளகோவிலில் தீவிர வாகன சோதனை


வெள்ளகோவிலில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 28 Jan 2022 4:30 PM GMT (Updated: 2022-01-28T22:00:46+05:30)

வெள்ளகோவிலில் தீவிர வாகன சோதனை

வெள்ளகோவில், 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்ைத விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால் தேர்தலுக்காக பறக்கும் படை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வெள்ளகோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது ரோட்டில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களுடைய ஆவணங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள பொருட்களை சோதனையிட்ட பிறகே வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

Next Story