3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் இடமாற்றம்


3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 28 Jan 2022 7:04 PM GMT (Updated: 28 Jan 2022 7:04 PM GMT)

3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 போலீசார் இடமாற்றம்

திருச்சி, ஜன.29-
திருச்சி மாநகர போலீசார் அவர்களது கோரிக்கையின் பேரில் திருச்சி போலீஸ் ஆட்சேர்ப்புப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு, அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் குமரன், ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்ட 3 பேர் திருச்சி போலீஸ் ஆட்சேர்ப்புப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றிய மலர்மன்னன், சிவக்குமார், அன்புசெல்வன், யுவராஜா, ஜோஷ்வா, எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய டயனா ஏஞ்சலினா, பொன்மலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய செல்வா வினோத், திருச்சி பட்டாலியன் பணியாற்றிய ராஜேஸ் குமார் மற்றும் தஞ்சை மாவட்ட போக்குவரத்து போலீசில் பணியாற்றிய பகவேந்தன், கோவை மாவட்ட நாகமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சரவணன் உள்ளிட்ட 10 போலீசார் திருச்சி போலீஸ் ஆட்சேர்ப்புப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் 75 போலீசார் அந்தந்த மாவட்ட போலீஸ் ஆட்சேர்ப்புப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Next Story