தோட்டம் அருகே பிடிபட்ட நட்சத்திர ஆமை


தோட்டம் அருகே பிடிபட்ட நட்சத்திர ஆமை
x
தினத்தந்தி 28 Jan 2022 7:48 PM GMT (Updated: 28 Jan 2022 7:48 PM GMT)

தோட்டம் அருகே நட்சத்திர ஆமை பிடிபட்டது.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் அருகே நட்சத்திர ஆமை ஒன்று இருந்ததை அப்பகுதியினர் கண்டனர். இதையடுத்து ஆமையை பிடித்த அவர்கள், இதுபற்றி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி அங்கு வந்து பார்வையிட்டு, நட்சத்திர ஆமை பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் நட்சத்திர ஆமையை மீட்டு, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Related Tags :
Next Story