குட்டியுடன் காட்டுயானைகள் உலா


குட்டியுடன் காட்டுயானைகள் உலா
x
தினத்தந்தி 29 Jan 2022 2:03 PM GMT (Updated: 2022-01-29T19:33:56+05:30)

குட்டியுடன் காட்டுயானைகள் உலா

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருவது வழக்கம். அவை அங்குள்ள மரங்களில் காய்த்து குலுங்கும் பலாப்பழங்களை ருசிக்கும். ஆனால் தற்போது பலாப்பழ சீசன் இல்லை. எனினும் பரவலாக பெய்து வரும் சாரல் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் பசுந்தீவனங்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. 

இதற்காக காட்டுயானைகள் படைபெயடுத்து வருகின்றன. கடந்த வாரம் குட்டியுடன் 5 காட்டுயானைகள் கே.என்.ஆர். நகர் பகுதியில் முகாமிட்டு இருந்தன. தற்போது மேலும் குட்டியுடன் 5 காட்டுயானைகள் வந்து பர்லியார், கே.என்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன. இவை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் காட்டுயானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story