பஸ்களுக்கு இருக்கை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 Jan 2022 4:38 PM GMT (Updated: 29 Jan 2022 4:38 PM GMT)

கரூரில் பஸ்களுக்கு இருக்கை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்
இருக்கை தயாரிக்கும் நிறுவனம்
கரூர் அருகே உள்ள சுக்காலியூர் பகுதியில் பஸ், வேன்களுக்கு இருக்கை தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்நிறுவனத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீயானது மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ஊழியர்கள் தீ விபத்து குறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கரூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 1 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.
மின்கசிவு
இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. இந்நிறுவனத்தில் 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கு முன்பு உள்ள குடோனில் இருந்து கனரக வாகனத்தில் ஊழியர்கள் பொருட்களை ஏற்றி கொண்டிருந்த நிலையில் அருகில் உள்ள கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குடோனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story