பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்


பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2022 6:29 PM GMT (Updated: 29 Jan 2022 6:29 PM GMT)

ஆன்லைன் பதிவு முறையால் தாமதம் ஏற்படுகிறது பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை:
ஆன்லைன் பதிவு முறையால் தாமதம் ஏற்படுகிறது பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
கோரிக்கை மனு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு போதிய தெளிவு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் ஆன்லைன் முறை விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், நெல் கொள்முதலில் தாமதம் ஏற்படுகிறது. 
எனவே ஆன்லைன் பதிவு செய்யும் முறையை தவிர்த்து, பழைய வழிமுறையாக இருந்த பட்டா, சிட்டா, அடங்கல் முறையை பயன்படுத்தி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், மயிலாடுதுறை தாலுகா ஆத்தூர் கிராமத்தில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். 
விவசாயிகளிடம் இருந்து மனுக்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் பெற்றுக் கொண்டார். அப்போது டெல்டா பாசன விவசாயிகள் சங்க ஆலோசகர் சுரேந்தர், துணைத் தலைவர் தேவேந்திரன், செயலாளர் சந்திரபாபு, செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் ஆனந்த் இன்பநாதம் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

Next Story