நிலத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு


நிலத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 29 Jan 2022 6:37 PM GMT (Updated: 2022-01-30T00:07:57+05:30)

திருமயம் அருகே நிலத்தகராறில் முதியவரை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருமயம், 
அரிவாள் வெட்டு
திருமயம் அருகே உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 61), விவசாயி. இவரது மகள் விஜயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சதீசுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று விஜயா, சதீசுக்கு இடையே நிலம் சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகளுக்கு ஆதரவாக பெருமாள், சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் பெருமாளை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
வலைவீச்சு
இதில் காயம் அடைந்த பெருமாளை அப்பகுதி மக்கள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சதீசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story