குளிர்காய நெருப்பு மூட்டிய காவலாளி தீயில் கருகி பலி


குளிர்காய நெருப்பு மூட்டிய காவலாளி தீயில் கருகி பலி
x
தினத்தந்தி 30 Jan 2022 4:30 PM GMT (Updated: 30 Jan 2022 4:30 PM GMT)

கண்டமனூரில் குளிர்காய நெருப்பு மூட்டிய காவலாளி தீயில் கருகி பலியானார்.

கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்தவர் சடையன் (வயது 76). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை குளிர்காய்வதற்காக சடையன் தோட்டத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து, தென்னை ஓலை மற்றும் மரக்கட்டைகளை வைத்து நெருப்பு மூட்டினார். அப்போது அதில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 
இதற்கிடையே அதன் அருகில் அமர்ந்திருந்த சடையன் எதிர்பாராதவிதமாக தீயில் விழுந்து விட்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
இதையடுத்து சடையனின் உறவினர்கள், இறுதி சடங்குகளை முடித்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் மயானத்திற்கு விரைந்து சென்று, சடையனின் உடலை கைப்பற்றினர். 
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story