தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை


தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 30 Jan 2022 8:10 PM GMT (Updated: 2022-01-31T01:40:12+05:30)

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

பொறையாறு:
உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
வாகன சோதனை
தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி, தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் தேர்தல் நடப்பதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வாக்கு சேகரிப்பதினை தடுக்கும் பொருட்டு, தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையில் போலீசார் நேற்று தரங்கம்பாடி மாணிக்கப்பங்கு கடற்கரை சாலையான குட்டியாண்டியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் முன்னிலையில் வாகன சோதனையை வீடியோ பதிவு செய்தனர்.

Next Story