அம்பையில் பொதுமக்கள் ‘திடீர்’ போராட்டத்தால் பரபரப்பு


அம்பையில் பொதுமக்கள் ‘திடீர்’ போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:58 PM GMT (Updated: 2022-01-31T03:28:16+05:30)

பொதுமக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது

அம்பை:
அம்பை வேலாயுத நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று திடீரென கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதை தடுக்கவில்லை என்றால் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என்றனர்.

Next Story