டிரைவரை தாக்கிய வாலிபர் கைது


டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
x

டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் பிரேம்குமார் (வயது 51). டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜான்சன் பிரேம்குமாரும், அந்தோணி மகன் டிரைவரான முத்துப்பாண்டி (33) என்பவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, ஜான்சன் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை நேற்று கைது செய்தார்.

Next Story