காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை


காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2022 12:30 AM GMT (Updated: 2022-01-31T06:00:30+05:30)

காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் எழில் (வயது 26). இவர், கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா நோய் தொற்று, ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் ஓட்டலில் போதிய வருமானம் இல்லாததால் மூடிவிட்டார்.

எழில், அதே பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண் காதலன் எழிலுடன் நீண்டநேரம் செல்போனில் பேசியதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட எழிலுக்கு அவரது நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் காதலி இறந்த சோகத்தில் இருந்த எழில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த எழில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story