எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி 3 சிறுவர்கள் பலி


எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி 3 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 31 Jan 2022 8:32 AM GMT (Updated: 2022-01-31T14:02:08+05:30)

சென்னை எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் என 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவொற்றியூர்

சென்னை எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் என 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை எண்ணூர் நெட்டுகுப்பத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவரது வீட்டில் அடுத்த மாதம் திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் வீட்டிற்க்கு உறவினர்கள் பலர் வந்துள்ளனர்.

வீட்டில் உள்ள சிறுவர்களை அருகே உள்ள நெட்டுகுப்பம் கடற்கரைப் பகுதிக்கு டேவிட்  அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருந்த 7 சிறுவர்களையும் திடீரென தோன்றிய ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த டேவிட், கடலுக்குள் ஓடிச்சென்று இஸ்ரவேல், ஜோஸ், பெஞ்சமின் மற்றும் ரூபா சாந்தா ஆகிய 4 பேரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தார். மீண்டும் கடலுக்குள் சென்ற டேவிட் தனது மகன் அலெச்சை பிணமாக மீட்டு வந்தார். 

தகவல் அறிந்து வந்த மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ருத்ராவையும் பிணமாக மீட்டனர். சிறுவன் விக்கி மாயமானதால் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை கண் முன்னே மகன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story