நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2022 10:08 AM GMT (Updated: 2022-01-31T15:38:38+05:30)

நண்பர்களுடன் குளித்தபோது வடக்குப்பட்டு அணை ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் மூழ்கி இறந்தார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை கோவிலன் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மகன் மகேஸ்வரன் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மகேஸ்வரன், நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வடக்குப்பட்டு அணை ஏரிக்கு சென்று குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து மேடவாக்கம் தீயணைப்பு துறை அலுவலர் கல்யாணராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் மூழ்கிய சிறுவன் மகேஸ்வரனை பிணமாக மீட்டனர். பள்ளிக்கரணை போலீசார் மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story