பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கி கொல்ல முயற்சி; ரவுடி கைது


பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கி கொல்ல முயற்சி; ரவுடி கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 10:23 AM GMT (Updated: 2022-01-31T15:53:45+05:30)

முன்விரோதம் காரணமாக, பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கி கொல்ல முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், பாண்டியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 26). இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜிண்டா ரமேஷ் (47) என்பவர், ஜெயந்தியை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி, உருட்டுகட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஜிண்டா ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாகவும், அவரது பெயர் ரவுடி லிஸ்டில் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக ஜெயந்தியை, ஜிண்டா ரமேஷ் தாக்கியதாகவும் போலீசார் கூறினார்கள்.


Next Story