வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 2022-01-31T18:38:37+05:30)

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.

கூடலூர்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்து உள்ளனர். 

சுற்றுச்சூழல் பாதிப்பு

கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் தார் கலவை மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து  கடந்த ஆண்டு அந்த தார் கலவை மையம் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு அந்த தார் கலவை மைய நிர்வாகம் முறையிட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் செயல்பட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலா போகர் காலனி மக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

பரபரப்பு

இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து தேவாலாவில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுக்கள் கூறும்போது, அந்த மையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தார் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.


Next Story