51 பேர் வேட்பு மனு தாக்கல்


51 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:10 PM GMT (Updated: 2022-01-31T19:40:55+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 3-வது நாளான நேற்று பலர் ஆர்வமுடன் மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்களாக 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
51 பேர் மனு
இதே போன்று நகராட்சிகளில் 6 பேரும், பேரூராட்சிகளில் 28 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
இதுவரை மாநகராட்சியில் மொத்தம் 9 பேரும், கோவில்பட்டி நகராட்சியில் 6 பேரும், திருச்செந்தூர் நகராட்சியில் 2 பேரும், பேரூராட்சிகளில் மொத்தம் 34 பேரும் ஆக மொத்தம் 51 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 7-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் நடக்கிறது.

Next Story