மதுவிற்ற 19 பேர் கைது


மதுவிற்ற 19 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2022 2:33 PM GMT (Updated: 2022-01-31T20:03:11+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போத, சட்ட விரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 8 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் ஆக மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 291 புகையிலைப் பாக்கெட்டுகள், 117 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,200 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story