அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரியில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்


அந்தியூர் அருகே  கெட்டிசமுத்திரம் ஏரியில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:45 PM GMT (Updated: 2022-01-31T20:15:33+05:30)

அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரியில் விவசாயிகள் வெண்டைக்காய்களை கொட்டினாா்கள்

அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த நிலையில் ஏரியில் நேற்று முன்தினம் மாலை சிலர் தங்களுடைய வெண்டைக்காய்களை வீசிவிட்டு சென்றுவிட்டனர். சுமார் 1 டன்னுக்கும் மேற்பட்ட வெண்டைக்காய்களை விவசாயிகள் வீசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘அந்தியூர் பகுதியில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து உள்ளனர். இங்குள்ள வெண்டைக்காய்களை வாங்குவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் பறித்து வைத்து வெண்டைக்காயை இனி விற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய வெண்டைக்காய்களை ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக வீசிவிட்டனர்,’ என்றனர். 


Related Tags :
Next Story