மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 31 Jan 2022 2:56 PM GMT (Updated: 2022-01-31T20:26:11+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 97 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 247 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 61 ஆயிரத்து 242 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2419 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 54 வயது உடைய ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளார்., இதனால் மாவட்டத்தில் 436 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Next Story