சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் பரிசு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் பரிசு: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 31 Jan 2022 3:37 PM GMT (Updated: 31 Jan 2022 3:37 PM GMT)

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரி கிராம விருது வழங்கப்பட உள்ளது. இதன்படி தேர்வாகும் கிராம ஊராட்சிக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் தேர்வாகும் கிராம ஊராட்சிக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை கிடைக்கும்.

இந்த விருதுக்காக வழங்கப்படும் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். இதற்கு தேர்வு செய்யப்படும் கிராம ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை உரிய முறையில் மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட 8 சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த விருதுக்கான கிராம ஊராட்சியை தேர்வு செய்ய கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் முன்மாதிரி கிராம விருது பெறுவதற்கு சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story