தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Jan 2022 4:30 PM GMT (Updated: 2022-01-31T22:00:13+05:30)

தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
கரூர் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு 71 கடைகள் உள்ளன. இங்கு அனைத்து விதமான காய்கனிகள் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் காமாட்சியம்மன் கோவில் நடுத்தெரு, செங்குந்தபுரம் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் தரைக்கடைகள் அமைத்து காய்கனிகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகளால் தங்களுக்கு வியாபாரம் குறைந்து வருவதாகவும், தரைக்கடைகளை அகற்ற வேண்டும் எனக்கூறி நேற்று இரவு சுமார் 7 மணியளவில் செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செங்குந்தபுரம் மெயின்ரோடு பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. 

Next Story