வியாபாரி வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு


வியாபாரி வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 4:45 PM GMT (Updated: 2022-01-31T22:15:46+05:30)

நத்தத்தில் வியாபாரி வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

நத்தம்:

நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). மாங்காய் வியாபாரி. இவருடைய வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்து பதுங்கி கொண்டது. இதனை கண்ட பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். அது 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஆகும். பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு கரந்தமலை வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.

Next Story