தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2022 5:17 PM GMT (Updated: 2022-01-31T22:47:21+05:30)

ஏர்வாடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீழக்கரை, 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி வெட்ட மனை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பால்ராஜ் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி நாகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அந்தோணி பால்ராஜ் தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக நாகேஸ்வரி கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். தனது மனைவி வேலைக்கு சென்றதை நினைத்து மனமுடைந்த அந்தோணி பால்ராஜ் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story