‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 Jan 2022 5:20 PM GMT (Updated: 2022-01-31T22:50:25+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

தேங்கி நிற்கும் கழிவுநீர்
பழனி தாலுகா பழைய ஆயக்குடி 2-வது வார்டு சாவடி அருகில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது.‌ இதனால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்கவேண்டும்.-அஜித்குமார், பழைய ஆயக்குடி.

சாக்கடை கால்வாய் வசதி
தேனி அரண்மனைபுதூர் வீரலட்சுமி கோவில் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் செல்கிறது. மேலும் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -கணேசன், தேனி.

சுகாதாரக்கேடு அபாயம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலசுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி.

வீணாக செல்லும் குடிநீர் 
சின்னமனூர் ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் சாக்கடை கால்வாய் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடை கால்வாயில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாவதோடு, அசுத்தமாகும் அபாயமும் உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -ரவி, அழகாபுரி.

Next Story