விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:51 PM GMT (Updated: 31 Jan 2022 5:51 PM GMT)

திருமருகலில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி:
திருமருகல் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் சந்திரசேகர், தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். நாகை மாவட்ட  விவசாய சங்க செயலாளர் பாபுஜி கோரிக்கையை விளக்கி பேசினார். டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. .இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருமருகல் கிளை செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

Next Story