ராமநாதபுரம் யூனியனில் ரூ.91 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு


ராமநாதபுரம் யூனியனில் ரூ.91 லட்சத்தில்  வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு
x
தினத்தந்தி 31 Jan 2022 6:03 PM GMT (Updated: 2022-01-31T23:33:06+05:30)

ராமநாதபுரம் யூனியனில் ரூ.91.12 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் யூனியனில் ரூ.91.12 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு 

ராமநாதபுரம் யூனியன் கழுகூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.78 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக் குட்டை, ரூ.20.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் 80 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து சித்தார் கோட்டை ஊராட்சியில் உள்ள பழனிவலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, புல்லங்குடி ஊராட்சியில் ரூ.1.61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக்குட்டை பணி, சித்தார் கோட்டை ஊராட்சியில் ரூ.6.26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை பணி, சித்தார் கோட்டை ஊராட்சியில் உள்ள பழனிவலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் பணி, சித்தார் கோட்டை ஊராட்சியில் உள்ள பழனிவலசை உயர் நிலைப்பள்ளி அருகில் ரூ.1.65 லட்சம் மதிப்பீட்டில் குறுங்காடு வளர்த்தல் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அடிப்படை வசதி 

அதே போல தேவிபட்டினம் ஊராட்சியில் சின்ன பள்ளி வாசல் தெருவில் ரூ.12.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை பணியினையும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார். தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவகிரக கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்காக செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார். 
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, உதவி பொறியாளர் அர்ஜூனன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story