பள்ளிகளில் தூய்மை பணி


பள்ளிகளில் தூய்மை பணி
x
தினத்தந்தி 31 Jan 2022 6:09 PM GMT (Updated: 2022-01-31T23:39:06+05:30)

இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. மேலும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. மேலும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்தது
 கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. மீண்டும் கொரோனா பரவியதால் கடந்த மாதம் (ஜனவரி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் என்றும், 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தூய்மை பணி
அதன்படி நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி என மொத்தம் 700 பள்ளிகள் இன்று (செவ்வாயக்கிழமை) திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணி நடந்தது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்றது.
 மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகள் தூய்மை செய்யப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story