வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம்


வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:18 PM GMT (Updated: 2022-01-31T23:48:54+05:30)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வாழவச்சனூர் வ ாரச்சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடந்தது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளை  விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல்செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இதனால் கால்நடைகளை வாங்க வரும் வியாபாரிகள் அதிகளவில் பணம் எடுத்து வந்தால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள் என்ற அச்சத்தில் அதிகளவில் வியாபாரிகள் வரவில்லை. 
இதனால் விற்பனைக்காக கொண்டு வந்த கால்நடைகளை மீண்டும் வீட்டிற்கு ஓட்டிச் சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் எதிர்பார்த்த அளவிற்கு மாடுகளை வாங்க பணம் கொண்டுவர முடியவில்லை.

 அதிகளவில் பணம் கொண்டு வந்தால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விடுகின்றனர். இதனால் குறைந்த அளவே பணம் கொண்டு வந்து கால்நடைகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

Next Story