கோழிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க இருவார தடுப்பூசி முகாம். அதிகாரி தகவல்


கோழிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க இருவார தடுப்பூசி முகாம். அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:19 PM GMT (Updated: 31 Jan 2022 6:19 PM GMT)

கோழிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க இருவார தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கால்நடைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூர்

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். முகாமில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதன்படி இந்தாண்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை இருவாரங்கள் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை சிகிச்சை நிலையங்களுக்கு சென்று அங்கு நடைபெறும்  முகாம்களில் கோழிகளுக்கு தொற்றுநோய் வராமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story