ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2022 6:21 PM GMT (Updated: 2022-01-31T23:51:46+05:30)

காரைக்குடியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.

காரைக்குடி

கல்லல் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் மீனாள் (வயது 58). இவர் தனது பழைய தங்க நகைகளை புதுப்பிப்பதற்காக காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள நகைக்கடைக்கு வந்தார். அங்கே தனது நகைகளை புதுப்பித்துக் கொண்டு மீண்டும் காரைக்குடி பழைய பஸ் நிலையம் சென்றார். அங்கிருந்து கல்லல் செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏறினார்.ஏறியவுடன் அவரது கட்டைப்பையில் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது நகைப்பையை காணவில்லை. அதில் 6¾ பவுன் நகைகளை வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் யாரோ அதனை எடுத்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மீனாள் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story