மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2022 6:24 PM GMT (Updated: 2022-01-31T23:54:37+05:30)

சிவகங்கை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த ஓ.புதூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது நண்பரான கருங்காபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (30) என்பவருடைய உறவினர் ஒருவர் கீழப்பூங்குடி கிராமத்தில் மாடு முட்டியதால் காயமடைந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக சந்தோஷ்குமார் மற்றும் கண்ணன். அவரது நண்பர் செல்வின் பாரதி (32) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கீழப்பூங்குடி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுதொடர்பாக மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story