மருதூர் பேரூராட்சி கண்ணோட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 Feb 2022 10:41 PM IST (Updated: 4 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

மருதூர் பேரூராட்சி குறித்த கண்ணோட்டம் பார்ப்போம்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மருதூர் பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. 
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 
கடந்த 1953-ம் ஆண்டில் இருந்து முதல் தர பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பேரூராட்சியில் 18 குக்கிராமங்கள் உள்ளன. 2011-ம் ஆண்டு  எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 5,320, பெண்கள் 5,605 என மொத்தம் 10,925 பேர் உள்ளனர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மருதூர் வடக்கு 1, 2, தெற்கு 1, 2, என மொத்தம் 4 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. கடந்த 2 முறை நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சம்பத் பேரூராட்சி தலைவராக இருந்தார்.
 இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இப்பேரூராட்சி எல்லையை அடுத்த இனுங்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இடம் வாங்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இப்பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை சேகரிக்க போதுமான வாகனவசதி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் அதை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. 
கழிப்பிட வசதி
முக்கிய பிரச்சினையாக அனைத்து கிராம மக்களுக்கும் தினசரி போதுமான குடிநீர் வழங்கத்தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தெருக்களில் முறையான சாலை வசதி செய்துதரவேண்டும். இப்பேரூராட்சிக்குட்டப் பட்ட மேட்டுமருதூர் செல்லும் வழியில் காட்டுவாரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குறுகிய கருங்கல் பாலத்தை அகற்றிவிட்டு அகலமான புதிய பாலம் கட்டவேண்டும். இங்குள்ள சமுதாய மன்றத்தை புனரமைப்பு செய்யவேண்டும். உரிய கழிப்பிட வசதி செய்துதரவேண்டும். வீரம்பூர் பகுதி மக்கள் ரெயில்வே இருப்புபாதையை கடந்தே தங்கள் ஊருக்கு சென்றுவருவதால் அவர்கள் தங்கள் பகுதிக்கு பாதுகாப்பாக சென்றுவர உரிய வழிவகை செய்யவேண்டும்.
போராட்டங்களில் ஈடுபட்டு...
மேட்டுமருதூர் பகுதியில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உடையநாதர் கோவில் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து உள்ளதால் இதை புனரமைக்கவேண்டும். சுப்பன் ஆசாரிகளம் எனகூறப்படும் விஸ்வநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இப்பகுதி பொதுமக்களால் முன்வைக்கப்படுகிறது.

Next Story