கரூர் மாவட்டத்தில் 1,328 பேர் வேட்புமனு தாக்கல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 Feb 2022 10:47 PM IST (Updated: 4 Feb 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,328 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 894 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இன்று (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 7-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று 894 மனுக்கள்
இப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், நகராட்சி ஆணையர்கள் அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 434 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசிநாள் என்பதால் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என ஏராளமானோர் வேட்புமனுதாக்கல் செய்ய வந்திருந்தனர். இதனால் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. 
இதனால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்புமனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கரூர் மாநகராட்சியில் 216 பேரும், குளித்தலை நகராட்சியில் 89 பேரும், பள்ளப்பட்டி நகராட்சியில் 51 பேரும், புகளூர் நகராட்சியில் 89 பேரும், புலியூர் பேரூராட்சியில் 49 பேரும், அரவக்குறிச்சி பேரூராட்சியில் 75 பேரும், மருதூர் பேரூராட்சியில் 84 பேரும், நங்கவரம் பேரூராட்சியில் 51 பேரும், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 49 பேரும், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 53 பேரும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 42 பேரும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 46 பேரும் என மொத்தம் 894 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
மொத்த வேட்புமனுக்கள்
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் 348 பேரும், குளித்தலை நகராட்சியில் 142 பேரும், பள்ளப்பட்டி நகராட்சியில் 124 பேரும், புகளூர் நகராட்சியில் 125 பேரும், புலியூர் பேரூராட்சியில் 63 பேரும், அரவக்குறிச்சி பேரூராட்சியில் 83 பேரும், மருதூர் பேரூராட்சியில் 108 பேரும், நங்கவரம் பேரூராட்சியில் 90 பேரும், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 66 பேரும், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 54 பேரும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 71 பேரும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 54 பேரும் என மொத்தம் 1,328 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.

Next Story